
புதுமுகங்கள் ஆச்சு – பிரிஷா நடிக்கும் “லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க”
அருணாசலம் தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக A.சரவணன் தயாரிக்கும் படத்திற்கு " லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க " என்று வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரிஷா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் நளினி நாடோடிகள் கோபால், கோதண்டம் பரோட்டா முருகேஷ் ஈரோடு முருகசேகர், திடியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி படத்தின் இயக்குனர் சு.சத்தியசீலனிடம் கேட்டோம்...இது முழுக்க முழுக்க பேமிலி காமெடி சப்ஜெக்ட்.இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைப்பது தான் எங்களது நோக்கம்.
தயாரிப்பாளர் சரவணன் அவர்கள் திருவண்ணாமலையில் அருணாசலம் தியேட்டரை பல வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்....தியேட்டரில் மக்கள் என்ன மாதிரியான படங்களை ரசிக்கிறார்கள் ..என்ன மாதிரியான காட்சிகளை கை தட்டி ரசிக்கிறார்கள்.. என்ன மாதிரியான படத்திற்கு மக்கள...