
நாகேஷ் திரையரங்கம் – திரைவிமர்சனம் ( சிறப்பான டிஜிட்டல் அரங்கம் ) Rank 3/5
தமிழ் சினிமாவில் சீசன்கள் அதிகம் அதாவது காதல் படங்கள் வந்தால் தொடர்ந்து வரும் அதேபோல பேய் படம் வெற்றி கிட்டதட்ட ஒரு ஐந்து ஆண்டுகளாக இருந்து வந்துகொண்டு இருந்த நேரத்தில் ஒரு சின்ன பிரேக் அப்புறம் வந்துள்ள பேய் படம்.
பொதுவாக தமிழ் சினிமாவில் பேய் படம் என்றால் கிராபிக்ஸ் தலையைவிரித்து அகோரமான முகங்களை கொண்டு தான் பேய் படங்கள் வரும் அதில் பாதி பயத்தை பின்னணி இசை மூலம் தான் பயமுறுத்துவார்கள் அனால் நாகேஷ் திரையரங்கம் படத்தில் அப்படி இல்லாமல் வித்தியாசமான கதை களம் பேயுடன் ஒரு சோசியல் மெசேஜ் கொடுத்து இருகிறார்கள். அதாவது சமுகத்தில் நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் இசாக்
வித்தியாசமான கதைக்கலாம் அதற்கு தேவையான நட்சத்திரம் அது படத்துக்கு மேலும் பலம் முதல் பாதியை காமெடி படமாகவும் இடைவேளைக்கு முன் ஒரு சின்ன பேய் பயத்தை கொடுத்து கலகலவென விறு விருப்பாக கொடுத்து இருக்கிறார்...