Wednesday, January 14
Shadow

Tag: #mamooty #nayanthara

மம்மூட்டி வாய்ப்பை தட்டி பறித்த நயன்தாரா

மம்மூட்டி வாய்ப்பை தட்டி பறித்த நயன்தாரா

Latest News, Top Highlights
நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் இன்று, பல பிரச்னைகளை கடந்து மாலை முதல் வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப்படத்தில் சி.பி.ஐ ஆபீஸராக நடித்துள்ளார் நயன்தாரா. அவரது தம்பியாக டாக்டராக அதர்வா நடித்துள்ளார். இருந்தாலும் கதை நயன்தாராவை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நயன்தாரா கேரக்டர் முதலில் ஆணாக, அதாவது ஹீரோ நடிப்பதாக எழுதப்பட்டது என சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட சொல்லப்பட்டது. இப்போது அந்த கேரக்டரில் முதலில் மம்முட்டி நடிப்பதாகத்தான் எழுதப்பட்டது என கூறியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. பின்னர்தான் கதை கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து பெண் கேரக்டராக மாற்றப்பட்டு அதில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்து அவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதியும் உள்ளே கொண்டு வரப்பட்டாராம்...