நோட்டாவுக்கு மாறிய விஜய் தேவரகொண்டா
‘அரிமா நம்பி’ ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் அடுத்ததாக காதல் கலந்த ஆக்ஷன் படத்தை இயக்கவிருக்கிறார். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சாடா நடிக்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. பூஜையில் நாயகன் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்சாடா, இயக்குனர் ஆனந்த் சங்கர், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், நாசர் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ‘ந...