
உதயநிதியின் `நிமிர்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்
மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் ‘நிமிர்’.
மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மகேஷிண்டே பிரதிகாரன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். நாயகனாக உதயநிதி ஸ்டாலிலும், நாயகியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர்.
சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
உதயநிதி போட்டோகிராபராக நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகி சிவா மற்றும் அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில், ‘நிமிர்’ படத்தை, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுக்கு படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படத்தை பார்த்த மோகன்லால் படத்தையும், உதயநிதியையும் பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது. ...