கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள “மயூரன்”
PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் "மயூரன்" என்று பெயரிடப்பட்டுள்ளது. மயூரன் என்றால் 'விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன்' என்று பொருள்.
வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ்), அமுதவாணன் (தாரை தப்பட்டை), அஸ்மிதா (மிஸ் பெமினா வின்னர்) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ஒளிப்பதிவை பரமேஷ்வர் செய்துள்ளார். இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர். படத்தின் இசையை பழையவண்ணாரப்பேட்டை படம் மூலம் பிரபலமடைந்த ஜுபின் மற்றும் ஜெரார்ட் இருவரும் செய்துள்ளனர். படத்தின் பாடல்களை குகை மா.புகழேந்தியும், எடிட்டிங் பணி...
