கல்வியின் மதிப்பை வலியுறுத்தும் ‘நடு நாடு’ – இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவுக்கு குவிந்த பாராட்டுகள்!
கல்வியின் மதிப்பை வலியுறுத்தும் 'நடு நாடு' – இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவுக்கு குவிந்த பாராட்டுகள்!
தமிழ் சினிமாவில் சமூக அக்கறை மிக்க கதைக்களத்துடன் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்றாக 'நடு நாடு' கவனம் ஈர்த்துள்ளது. சாகித்யா கிரியேஷன்ஸ் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம், கல்வியின் அவசியத்தையும் அதன் சமூக தாக்கத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் அறிமுக நாயகர்களாக எழில் மற்றும் அருண்குமார் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கின்றனர். இவர்களுடன் கதாநாயகியாக அனுஸ்ரீ நடித்துள்ளார். மேலும், 'காந்தாரா' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சம்பத் ராம், இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவருடன் மூத்த நடிகை ராஜஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்...

