நாகார்ஜுனாவின் 100வது படம் ‘KING 100’ – பிறந்தநாள் பரிசாக வெளியான கிளிம்ப்ஸ்; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரா.கார்த்திக் கூட்டணி
நாகார்ஜுனாவின் 100வது படம் ‘KING 100’ – பிறந்தநாள் பரிசாக வெளியான கிளிம்ப்ஸ்; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரா.கார்த்திக் கூட்டணி
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா, தனது திரைப்பயணத்தின் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது 100வது திரைப்படமாக உருவாகி வரும் ‘KING 100’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான நாகார்ஜுனா, ‘உதயம்’, ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’, ‘குபேரா’, ‘கூலி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனது தனித்துவமான திரை ஆளுமையை பதிவு செய்தவர். இந்நிலையில், அவரது நூறாவது படத்தை தமிழில் கவனம் பெற்ற இயக்குநர் ரா. கார்த்திக் இயக்குவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘நித்தம் ஒரு வானம்’ மற்றும் ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்...
