அரவிந்த்சாமியின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படக்குழுவில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஹர்ஷினி மூவிஸ் சார்பில் எம்.ஹர்சினி தயாரித்து வரும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்'.
சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நிகிஷா படேல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு முடிந்து இறுதிகட...