பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் உழைப்புக்கு அங்கீகாரம்! 50 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நடிகை அனுமோல்
பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் உழைப்புக்கு அங்கீகாரம்! 50 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நடிகை அனுமோல்
குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களைக் கௌரவிக்கும் வகையில், நடிகை அனுமோல் 50 பெண்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
நவராத்திரி விழாவின் நிறைவாகக் கொண்டாடப்படும் விஜயதசமி நாளில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உழைக்கும் பெண்களின் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் போற்றும் வகையில் அமைந்தது.
‘அயலி’ இணையத் தொடரின் மூலம் டிஜிட்டல் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை அனுமோல். திரையில் மட்டுமின்றி, சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அனைவரும் சமம் என்ற எண்ணத்தை வலியுறுத்தும் அவர், தன்னைச் சந்திக்கும் ரசிகர்களுக்கு ‘Always Choose Kindness’ என்ற வாசகத்துடன் கையொப்பமிடுவதை வழக்கமாகக...
