
வைகை எக்ஸ்பிரஸ் – திரைவிமர்சனம் ( செம ஸ்பீட் பயணிக்கலாம் ) Rank 3.5/5
முயற்சிதான் திருவினையாக்கும் என்பது பழமொழி அதை நிரூபித்தவர் என்றால் அது நடிகர் R.K என்று சொல்லணும் அது சினிமா மட்டும் இல்லாமல் நிஜ வாழ்கையுளும் பொருந்தும் தன் வியாபாரத்திலும் இன்று ஒரு முன்னோடியாக திகழ்வது பாராட்ட வேண்டிய விஷயம் . தான் மட்டும் வாழ்ந்தால் போதாது தன்னுடன் இருப்பவர்களும் நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர் R.K.
இவரின் தொடர் சினிமா தேடல் இந்த வைகை எக்ஸ்பிரஸ் படம் மூலம் ஓர் அளவுக்கு பூர்த்தி செய்துள்ளார் என்று தான் சொல்லணும். வைகை எக்ஸ்பிரஸ் படத்துக்கு அரங்கத்துக்கு போனால் படம் நிச்சயம் உங்களுக்கு மிக பெரிய சப்ரைஸ் காத்து இருக்கிறது என்று தான் சொல்லணும் படம் ஆரம்பம் ஆன முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சிவரை செம விறுவிறுப்பு என்று தான் சொல்லணும் .
சரி இந்த படத்தில் யார் யார் நடித்துள்ளனர் ,கதை வைகை எக்ஸ்பிரஸ் வேகம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் .
இந்த ப...