“கனவில் தொடங்கிய பயணம்… ‘Take A Shot’ மூலம் திரைப்படத் தயாரிப்பில் புதிய அத்தியாயம் தொடங்கிய ஆஷி – ரியா!”
"கனவில் தொடங்கிய பயணம்... ‘Take A Shot’ மூலம் திரைப்படத் தயாரிப்பில் புதிய அத்தியாயம் தொடங்கிய ஆஷி - ரியா!"
திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அல்ல, மக்களின் மனதோடு உரையாடும் சக்திவாய்ந்த ஊடகம் என்ற நம்பிக்கையுடன், புதிய தயாரிப்பு நிறுவனமான ‘Take A Shot’ தனது பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
நீண்ட காலமாக சினிமா துறையில் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவை மனதில் சுமந்து வந்த ஆஷி மற்றும் ரியா, அந்தக் கனவை இன்று நனவாக்கியுள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக தீவிர திட்டமிடல், கற்றல் மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.
இந்த புதிய முயற்சிக்கு சினிமா உலகின் முக்கிய பிரபலங்கள் வழங்கிய வழிகாட்டுதலும் ஊக்கமும் பெரும் பங்காற்றியதாக நிறுவனர் குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் சுதா கொங்கரா, சிவகுமார் ஆனந்தசுப்ரமணியம், தமிழ் க...
