பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள தயார் பிரபல நடிகை அதிரடி
என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல். தற்போது கஸ்தூரி ராஜ இயக்கத்தில் ஜாக்கி செராப் ஜோடியாகவும் பாண்டிமுனி படத்திலும் நடித்து கொண்டுயிருக்கிறார். அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படங்களிலும் வாய்ப்பு வருகிறது. ஆனால் முன்னணி நடிகர் ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். தமிழில் 2 வருடத்துக்கு பிறகு மீண்டும் பாண்டிமுனி படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறேன். திரையுலகில் சமீபகாலமாக காஸ்டிங் கவுச் பிரச்னை பேசப்பட்டு வருகிறது. நடிகைகள் படுக்கைக்கு உடன்பட்டால்தான் வாய்ப்பு தரப்படுவதாக கூறப்படுகிறது.
இதுபற்றி முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அப்படியொரு நிலைமை இருக்கிறது என்பது கசப்பான உண்மைதான். ஆனால் இது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா துறை என்பதால...
