நடிகை நிரோஷா பிறந்த தினம்
நிரோஷா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடைய தகப்பனார் எம். ஆர். ராதா ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ராதிகா, மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் ராதா ரவி, எம். ஆர். ஆர். வாசு, ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.
இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
அக்னி நட்சத்திரம், செந்தூரப்பூவே, சூரசம்ஹாரம், பட்டிக்காட்டு தம்பி, என் கணவர், கை வீசம்மா கை வீசு, சொந்தக்காரன், பொறுத்தது போதும், பாண்டி நாட்டுத் தங்கம், இணைந்தக் கைகள், பறவைகள் பலவிதம், மருது பாண்டி, காவலுக்குக் கெட்டிக்காரன், மைந்தன், பாரம்பரியம், சிலம்பாட்டம், படிக்காதவன், அம்பாசமுத்திரம் அம்பானி...