‘நிசப்தம்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா
கருத்துள்ள படங்களுக்கு வரி விலக்கு வேண்டும் : பட விழாவில் இயக்குநர் பேச்சு .
சமுதாயக் கருத்துள்ள படங்களுக்கு வரி விலக்கு கண்டிப்பாக வேண்டும் என்று "நிசப்தம் "பட விழாவில் இயக்குநர் அறிவழகன் பேசினார் .
இது பற்றிய விவரம் வருமாறு:
மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்திருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் மூத்த நடிகர் ‘டத்தோ’ ராதாரவி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ், இயக்குநர்கள் மீரா கதிரவன், மிஷ்கின், திருமதி கிருத்திகா உதயநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் படத்தின் நாயகன் அஜய், நாயகி அபிநயா, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பேபி சாதன்யா, பழனி, பாடகர்...