ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் தலைவர் P.C. ஸ்ரீராம் முன்னாள் நிர்வாகத்தினர் மீது போலீசில் புகார்
தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தினர்(SICA) சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் ஊழல் முறைகேடு புகார் அளித்தனர். அதில் சொல்லப்பட்டிருந்த புகார்கள்…
1. 2008 முதல் 2014 வரைக்குமான கணக்குகளை சரியாக ஒப்படைக்காதது.
2. மலேசியாவில் நடந்த 2015 ஆம் ஆண்டுக்கான SICA விருது நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கணக்குகளில், பல லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது.
3. அது சம்பந்தமாக பலமுறை, கணக்குகளை கேட்டும், தராமல் இருந்தது.
4. இதனால் விருது நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு உரிமம் பெற்ற சன் TV-வின TDS பணமான 37.5 லட்சத்தை திரும்ப பெற முடியாத நிலை இருக்கிறது.
5. சாலிகிராமத்தில் நில மதிப்புக்கு மீறி 1.25 கோடி ரூபாயை முன் பணமாக செலுத்தி, மேலும் 80 லட்சம் ரூபாய் அந்த நிலத்திற்கு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து, SICA சங்கத்திற்கு மிகப்பெரிய பொருளாதார ...
