‘பப்பி’ மூலம் ஹீரோ அவதாரம் எடுக்கும் வருண்
போகன், நெருப்புடா, மற்றும் நைட் ஷோ ஆகிய படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த வருண், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவாக அவதாரம் எடுக்கவிருக்கும் வருண், சினிமாவுக்கு தேவையான, நாயகனாக புகழ் பெற அவசியமான அத்தனை கலைகளையும் நன்கு கற்றிருக்கிறார். 'காக்கா முட்டை' மணிகண்டனின் இணை இயக்குனர் நட்டு தேவ் இயக்கும் 'பப்பி' படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டேவுடன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு நாய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்யுக்தா ஹெக்டே அவரது கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் தனது துறுதுறு கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த தருணத்திலிருந்தே அவரின் தமிழ் ரசிகர்கள், தமிழில் அவர் எப்போது அறிமுகமாவார் என்று காத்திருந்தனர்....
