
“முதல் முறையாக கோர்ட் அறை செட்டிற்குள் நுழைந்த போது பதட்டமாக உணர்ந்தேன் – பூர்ணா!
ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தன் முதல் வழக்கு தயாராவது போல, பூர்ணாவும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் தயாராகியிருக்கிறார். தான் தோன்றுகிற எந்த ஒரு கதாபாத்திரத்திலும், பூர்ணா தனது நிலையை அடுத்த அடுத்த கட்டத்துக்கு உயர்த்துகிறார். 'சவரக்கத்தி'யில் அவரின் பாராட்டத்தக்க நடிப்பை மறக்க முடியாது. அவர் பார்வையாளர்களை சிரிக்க வைத்தார், சில சமயங்களில் உணர்வுப்பூர்வமாகவும் ஒன்ற வைத்தார்.
சொல்லப்போனால் 'ஒரு சரியான நடிகர் காலவரையறை பற்றி கவலைப்பட மாட்டார், தன் நடிப்பாற்றல் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, சக்தி வாய்ந்த நடிப்பை வழங்குவார். தற்போது ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்து வரும் 'அடங்க மறு' படத்தில், வழக்கறிஞராக நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இந்த கதாபாத்திரத்தில் அவரை தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் ஒரு மிருதுவான காரணத்தைக் கூறுகிறார். அவர் கூறும்போது, "ஆரம்பத்தில், வலுவான ஒரு ச...