
பொதுவாக எம்மனசு தங்கம் – திரைவிமர்சனம் (கிராமத்து தங்கம்) Rank 3/5
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பின் வந்து இருக்கும் கிராமத்து காதல் மற்றும் காமெடி படம் என்று தான் சொல்லணும். படம் ஆரபம் முதல் சிரிப்பு வெடி ஆரம்பம் என்று தான் சொல்லணும் காரணம் இயக்குனர் தளபதி பிரபு இயக்குனர் பொன் ராம் பள்ளியில் இருந்து வந்தவர் அதுனால் என்னவோ படம் முழுக்க கலகலவென நகர்த்தி இருக்கிறார் என்று சொல்லணும்
படத்தின் மிக பெரிய பிளஸ் படத்தில் நடித்த நடிகர்களும் கதாபாத்திரமும் தான் என்று சொல்லணும் இயக்குனர் அதிலே வெற்றி கண்டுவிட்டார் என்றும் சொல்லலாம் அதே போல படத்தின் நாயகன் உதயநிதி நம்மை எல்லாம் வாயை பிளக்கும் அளவுக்கு தன பங்கை உணர்ந்து செயல்பட்டுள்ளார். அவரின் நடனம் சண்டை நடிப்பு எல்லாவற்றிலும் மிக தேர்ச்சியாக வளர்ந்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது.
படத்தின் மிக பெரிய பிளஸ் என்றால் அது பார்த்திபன் என்று தான் சொல்லணும் அவர் படத்தின் வில்லனா இல்லை ஹீரோவா என்று சொல்லும் அ...