பிரபாஸ்யின் சாஹோ படத்துடன் இணையும் பூஷன் குமார்,
இந்தியாவின் வடமாநிலங்களில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) மிகப் பிரம்மாண்டமான வெற்றி, பிரபாஸின் அடுத்த திரைப்படமான சாஹோவிற்கு மிக பிரம்மாண்டமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தயாரிப்பாளரான பூஷன் குமார், சாஹோ திரைப்படத்தை வட இந்திய மாநிலங்களில் வெளியிடும் நோக்கில் தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணைகிறார்.
இது தொடர்பாக பூஷன் குமாரின் TT-சீரீஸ் நிறுவனம், வட மாநிலங்களில் சாஹோ திரைப்படத்தை இந்தி ரசிகர்களுக்காக வெளியிட UV கிரியேஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரபாஸின் அடுத்த திரைபடத்திற்கான இந்த ஒப்பந்தம், இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் திருப்புமுனை ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.
முதல்முறையாக சாஹோ திரைப்படத்திற்காக, இரண்டு மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து, கூட்டாக ஒரு அதிநவீன அதிரடி திரைப்படத்தை ரசிகர்களுக்காக ...