மூன்று மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படைப்பு – பிரபாஸ் நடிக்கும் சாஹூ
இந்தியாவின் மிக சிறந்த காவிய திரைப்படங்களில் ஒன்றான பாஹுபலியின் நட்சத்திர நாயகன் பிரபாஸ் மீண்டும் மக்கள் மனதை கவர மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் "சாஹூ" மூலம் தயாராகிவிட்டார்.
பாஹுபலி 2ம் பாகத்தின் எதிர்பார்ப்புகள் எகிறிகொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தியா முழுவதும் உள்ள பிரபாஸின் ரசிகர்கள் அவருடைய அடுத்த படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளில் இறங்கிவிட்டார்கள். பாஹுபலியில் தன்னுடைய முக்கிய பங்களிப்பின் மூலம் இன்று எல்லா தரப்பு மக்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்ட பிரபாஸ், திரைத்துறை, ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்பவர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் கூட அவரது அடுத்த படத்தை வெள்ளித்திரையில் காண்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையொன்றுமில்லை.
பாஹுபலியில் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட அக்கறையும், கடின உழைப்பும், ம...