
தனுஷின் மாரி 2 படத்துக்காக நடனம் அமைத்த பிரபுதேவா
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இந்தப் படத்தின் மூலம் மறுபடியும் தனுஷுடன் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு, பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்தத் தகவலை தனுஷே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “நான் இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
இந்தியாவில் நடனம் வளர்வதற்கு காரணமான பிரபுதேவா, ‘மாரி 2’ படத்தில் எங்களுக்காக ஒரு பா...