ஜி.வி.பிரகாஷ் குரலில் காதல் தொனிக்கும் `எனக்கெனவே’ ஆல்பம்
தமிழில் இதுவரை எத்தனையோ ஆல்பம் பாடல்கள் வந்துள்ளது. அதில் பல புதுமையானவையாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் முற்றிலும் புதுமையாக திரைப்படத்துறை அனுபவம் கொண்ட பலர் மற்றும் ஜாம்பவான்கள் சிலர் இணைந்து `எனக்கெனவே' என்ற ரொமாண்டிக் வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த ரொமண்டிக் மியூசிகல் ஆல்பத்துக்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த `ப்ரூஸ் லீ' படத்தில் இடம்பெற்ற `நான்தான் கொப்பன் டா' என்ற சிங்கள் பாடலுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை இயக்குநர் எம்.ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஸ்ரீ இயக்கியுள்ளார். கவிஞர் முத்தமிழ் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.
கபாலி, பைரவா போன்ற படங்களில் பணியாற்றிய தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பிரவீ...