கேரளா மக்களுக்கு ஒரு கோடி நிதி வழங்குகிறேன் ராகவா லாரன்ஸ்
நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி பிறகு நடிகராகவும் இயக்குனராகவும் புகழ்பெற்றவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இப்போது காஞ்சனா 3 திரைப்பட வேலைகளில் பிசியாக உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத மழை, வெள்ளத்தினால் கேரளா மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இழப்பை சரிசெய்ய 2500 கோடி ஆகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
தமிழ்த் திரையுலகில், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஜய் மற்றும் நடிகை ரோகினி கீர்த்தி சுரேஷ் ஹன்சிகா உள்ளிட்ட பலரும் நிதியுதவியளித்துள்ளனர். அந்த வகையில் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ala...
