Wednesday, January 14
Shadow

Tag: #rajamouli #prabahas #sathyaraj @raana #anushka #tamanna

திருட்டுத்தனமாக வெளியான பாகுபலி-2 காட்சிகள் இணையதளத்தில் நீக்கம்

Latest News
ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘பாகுபலி-2’. இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதில் பிரபாஸ்-அனுஷ்கா நடித்துள்ள முக்கிய காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. அதில், பிரபாஸ், அனுஷ்கா இருவரும் படை வீரர்களுடனும் எதிரிகளுடனும் வாக்குவாதம் செய்கிறார்கள். பின்னர் அவர்களை தாக்க தயாராகிறார்கள். முதல் பாகத்தில் அனுஷ்கா அழுக்கான புடவையுடன் விலங்கிட்டபடி இருந்தார். இதில் இளவரசி தோற்றத்தில் உள்ள அனுஷ்கா அழகாக இருக்கிறார். பேசிக்கொண்டிருக்கும் பிரபாஸ் தனது வில்லை எடுத்து எதிரியை வீழ்த்துவது போன்ற காட்சியுடன் இது முடிவடைகிறது. இதுதவிர அடுத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனிமே‌ஷன் வடிவத்தில் இடம் பெற்றிருக்கிறது. மொத்தம் 60 ஷாட்டுகள் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது....