கமல் மற்றும் ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கும் விஜய்
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து அதிரடி காண்பித்துவிட்டார். மேலும், தனது கட்சிக்காக மாவட்டம் வாரியாக உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், ஒவ்வொரு மாவட்டத்திற்கான பொறுப்பாளர்களை நியமித்து அவர்களது பெயர்களையும் வெளியிட்டு வருகிறார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போல நடிகர் விஜய்க்கும் அரசியல் மீது ஆர்வம் இருந்த நிலையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவரது படங்கள் ரிலிஸின் போது தொடர்ந்து சந்தித்த சிக்கலால், தனது அரசியல் ஆசைக்கு ஓய்வு அளித்திருந்தார்.
தற்போது, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலில் நுழைய உள்ள நிலையில், விஜயும் அரசியலில் ஈடுபடுவதற்காக முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தனது படங்களில் அரசியல் வசனங்களை பேசி சர்ச்சையை உருவாக்கி...