தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. உருகிய ரஜினி!!
ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பில் அவர் பேசியதாவது…
என் அரசியல் அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி.
ஊடகங்களை எப்படி கையாள்வது என்றே எனக்கு தெரியவில்லை.
தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
நானும் 2 மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்தும் ஆசிரியராக பணிபுரிந்துள்ளேன்.
நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டியளித்தேன்.
என் அரசியல் பணிக்கு ஊடகங்களின் உதவி தேவை. நம் எல்லோருக்கும் கடமை உள்ளது.
மிகப்பெரிய புரட்சி எல்லாம் தமிழகத்தில் இருந்து தான் துவங்கியுள்ளது.
விரைவில் உங்களை சந்தித்து கட்சி கொடி பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன்....