Saturday, November 7
Shadow

Tag: Rajisha Vijayan

பிரிந்திருந்தாலும் பாசம் குறையவில்லை… மகனுக்காக ஏங்கும் தந்தையின் மனதைச் சொல்லும் ஜீவாவின் ‘தகப்பன்’!

பிரிந்திருந்தாலும் பாசம் குறையவில்லை… மகனுக்காக ஏங்கும் தந்தையின் மனதைச் சொல்லும் ஜீவாவின் ‘தகப்பன்’!

Latest News, Top Highlights
பிரிந்திருந்தாலும் பாசம் குறையவில்லை… மகனுக்காக ஏங்கும் தந்தையின் மனதைச் சொல்லும் ஜீவாவின் ‘தகப்பன்’! நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள இந்தப் பாடல், தந்தை – மகன் உறவில் இருக்கும் சொல்லப்படாத அன்பையும், பிரிவால் ஏற்படும் வலியையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஒரு தந்தை தனது மகனுடன் வாழ முடியாத சூழல். இருந்தாலும் மகனின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தையும் தொலைவில் இருந்தபடியே பார்த்து ரசிக்கிறார். தன்னுடைய இருப்பை மகனுக்குத் தெரியப்படுத்த முடியாவிட்டாலும், அவன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து மனதுக்குள் மகிழ்கிறார். இப்படிப்பட்ட ஒரு தந்தையின் உணர்வுகளைத்தான் ‘தங்கப்புள்ள’ பாடல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. தமிழ் சினிமாவில் தந்த...
மதுரையில் பூஜையுடன் தொடங்கிய ஜீவாவின் ‘தகப்பன்’… தந்தை–மகன் பாசத்தை பேசும் புதிய குடும்பப் படைப்பு!

மதுரையில் பூஜையுடன் தொடங்கிய ஜீவாவின் ‘தகப்பன்’… தந்தை–மகன் பாசத்தை பேசும் புதிய குடும்பப் படைப்பு!

Latest News, Top Highlights
மதுரையில் பூஜையுடன் தொடங்கிய ஜீவாவின் ‘தகப்பன்’... தந்தை–மகன் பாசத்தை பேசும் புதிய குடும்பப் படைப்பு! முன்னணி நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான 'தகப்பன்' இன்று மதுரையில் நடைபெற்ற எளிமையான மற்றும் சிறப்பான பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. வெற்றிப் படங்களான 'கருடன்', 'மாமன்' ஆகியவற்றை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம், இந்தப் படத்தை மிகுந்த தரத்துடனும், வலுவான கதைக்களத்துடனும் உருவாக்குகிறது. பூஜை நிகழ்வில் படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் 'தகப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கிறார். முதல் முறையாக இணையும் இந்த ஜோடி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்பட...