மீண்டும் கன்னட சினிமாவில் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு
கன்னடத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு நடிகை த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
’பேட்ட’, ’பரமபதம் விளையாட்டு’ போன்ற படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா ‘ராங்கி’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்திற்காக த்ரிஷா குதிரையேற்ற பயிற்சியில் சமீபத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன.
இந்த நிலையில், த்ரிஷா நடிக்கும் படத்தின் அடுத்தப்பட அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தை, கன்னடத்தில் பெரும் வெற்றிபெற்ற ’லூசியா’, ’யூ டர்ன்’ வெற்றிப்படங்களை இயக்கிய பவண் குமார் இயக்குகிறார். இவர், சமீபத்தில் இயக்கிய அமலாபாலின்‘குடியெடமைதே’ என்ற வெப் சீரிஸ் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தகது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பவர்’ படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமாருக்கு ஜோ...