அடுத்த வாரம் “எம். ஜி. ஆர்” திரைப்படத்தின் ‘டீஸர்’ வெளியீடு
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில் ‘எம். ஜி. ஆர்’ எனும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.
இத்திரைப்படத்தில் எம்.ஜி .ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதிஷ் குமார் எம். ஜி. ஆர் வேடத்தில் நடிக்கிறார் . எம். ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாராக ரித்விகாவும், M .R . ராதாவாக பாலாசிங், இயக்குநர் பந்துலுவாக Y .G மகேந்திரன், எம். ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடகக் கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவை எட்வின் சகாய் கையாள படத்தொகுப்பை அகமது கவனிக்கிறார்.
எம் . ஜி . ஆர் தனது திரைப்படத்தில் கதைக்கும் தனது கத...

