விரைவில் வெளிவர இருக்கும் ரங்கா படத்தின் டப்பிங் பேசி முடித்த சிபி ராஜ்
நடிகர் சிபிராஜ் தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது கேரியரின் பெருமைக்குரிய படமான 'மாயோன்' படத்தில் நடித்து வரும் அதே வேளையில், வினோத் டி.எல் இயக்கியுள்ள 'ரங்கா' படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார்.
படம் மிகச்சிறப்பாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறும்போது, "இயக்குனர் சொன்ன கதையை அப்படியே திரையில் பார்க்கும்போது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் உண்மையான மகிழ்ச்சியே. குறிப்பாக, ஒரு சரியான நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்கும் இயக்குனர் கிடைப்பது வரம். படத்தின் இறுதி வடிவம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, அதை பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை பார்க்கும்போது ஒரு பார்வையாளராக எனக்கும் ஆர்வம் இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் படத்தின் முன்னேற்றத்திற்கு ...
