ரங்கூன் படத்தின் நாயகி சிம்ரன் இடத்தை பிடிப்பார் – இயக்குனர் ஏஆர் முருகதாஸ் நம்பிக்கை
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார்.
இரட்டையர்கள் என்றாலே ஒரு மேஜிக் மாதிரி தான். அவர்களுடன் இந்த படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம். குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுக்கு எனக்கு எப்பவுமே பயம். ஆனால் இந்த படத்தில் ரொம்ப கூலான சதீஷ் மாஸ்டர் தயவால் குத்துப் பாட்டுக்கும் ஆடியிருக்கிறேன். இயக்குனர் ராஜ்குமார் சில முக்கிய தருணங்களில் நான் தான் நடிக்கணும் என எனக்காக நின்றார். ரொம்ப அன்பானபர், தெளிவான இயக்குனர் என்றார் நாயகன் கௌதம் கார்த்திக்.
...