4000 மாணவர்கள் மத்தியில் ‘துரோகம் பழகு’ 3rd Look வெளியீடு – டீசருக்கு Repeat கேட்டு உற்சாகம் காட்டிய கோவை ரத்தினம் கல்லூரி மாணவர்கள்!
4000 மாணவர்கள் மத்தியில் ‘துரோகம் பழகு’ 3rd Look வெளியீடு – டீசருக்கு Repeat கேட்டு உற்சாகம் காட்டிய கோவை ரத்தினம் கல்லூரி மாணவர்கள்!
கோவை: மகிழ் Productions சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துரோகம் பழகு’. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் Second Look போஸ்டரை புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ‘துரோகம் பழகு’ படத்தின் 3rd Look போஸ்டர் மற்றும் டீசர் வெளியீட்டு விழா கோவை ரத்தினம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங...
