கனாவை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த தயாரிப்பில் ரியோ நாயகனாக
முதல் படமான கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தற்போது "தயாரிப்பு எண் 2" படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன.
படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, "இது வழக்கமான விஷயமாக தோன்றலாம், ஆனால் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, எங்களை ஊக்கப்படுத்தியதும், எங்கள் படைப்பு சுதந்திரத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களை படத்தை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல உற்சாகம் அளித்தது. இப்போது படப்பிடிப்பின் இறுதிக்கட...