
ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் LKG அரசியல் நக்கல் படம்
ஆர்.ஜே.வாகப் பணியாற்றும் பாலாஜி, சமூக விஷயங்களிலும் அக்கறை கொண்டவர். சென்னையில் வெள்ளம் வந்தபோது, நடிகர் சித்தார்த்துடன் இணைந்து உதவிகளை ஒருங்கிணைத்தவர். சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பிரச்சினை எழுந்தபோது, ‘நான் கமெண்ட்ரி செய்யவில்லை’ என வெளிப்படையாக அறிவித்தவர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமான பாலாஜி, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வடகறி’, ‘தேவி’, ‘காற்று வெளியிடை’, ‘ஸ்பைடர்’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். ‘கீ’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘யங் மங் சங்’, ‘விசுவாசம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
ஆர்.ஜே. பாலாஜி அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதற்கு ஏற்றதுபோல சுவர் விளம்பரம், கட்சிக்கொடி என வ...