மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா புதிய ரொமாண்டிக் காமெடி ரோம்-காம்
ரொமாண்டிக் காமெடி படங்கள் உலகளாவிய பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்திழுக்கும். அந்த வகை ஜாலியான படங்களே மக்கள் கூட்டத்தை முழுவதுமாக இழுத்து விடும். குறிப்பாக, நல்ல அழகான ஜோடி நாயகன், நாயகியாக நடிக்கும்போது அது இன்னும் கூடுதல் ஈர்ப்பை தருகிறது.
ஹாலிவுட் இயக்குனர் ராண்டி கென்ட்டிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த பிரபு ராம்.சி இயக்கும் ரோம்-காம் திரைப்படத்தில், மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இயக்குனர் பிரபு ராம் படத்தை பற்றி கூறும்போது, "ரோம்-காம் படங்களின் தீவிரமான ரசிகன் நான். அது எந்த மொழி, எந்த நாட்டு படமாக இருந்தாலும் தவறாமல் பார்த்து விடுவேன். சேட்டிலைட் சேனலில் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்த காலம் முதல் எனக்கு ரொமாண்டிக் காமெடி படங்கள் இயக்கும் இயக்குனராக வேண்டும் என்பது ஆசை" என்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மில்லயன் ரசிகர்களின் ஃபேவரைட்டான,...
