சபாபதி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் நடிகர் சந்தானம், எம்எஸ் பாஸ்கர், விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிப்பில் வெளியான சபாபதி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்,
பிறப்பிலிருந்தே பேச்சு சரியாக வராமல் திக்கி திக்கி பேசி வருபவர் சந்தானம் ( சபாபதி ). இவருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வருபவர் சாவித்திரி. சந்தானத்தின் அப்பா அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற தன்னுடைய மகனை வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை தொடர்ந்து பல நேர்காணலுக்கு அனுப்ப அங்கே சந்தானத்திற்கு வெறும் அவமானங்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் கடுப்பான சந்தானம் ஒருநாள் வீட்டிற்கு குடித்து விட்டு வந்தபோது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். இதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம்.
வழக்கம் போல சந்தானம் இந்த படத்தில் தன்னுடைய கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இதோடு இல்லாமல் அதோடு ச...
