Sunday, September 25
Shadow

Tag: samikannu

தயாரிப்பாளர் சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாமிக்கண்ணு வின்சென்ட்  தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சலனப் படங்களைத் திரையிடத் தொடங்கிய இவர், பின்னாளில் கோயமுத்தூரில் மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே. சாமிக்கண்ணு வின்சென்ட் 1883 ஏப்ரல் 18-ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் தம்புசாமி. இவர் கோவை நகராட்சியில் பணிபுரிந்தார். [3]தனது 22-ஆவது அகவையில் தென்னக இரயில்வே திருச்சி பொன்மலை புகைவண்டி நிலையத்தில் பொறிமுறைவரைதலறிஞனாக மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்...