பணம் கொடுக்காமல் டப்பிங் பேச வர முடியாது – அரவிந்த்சாமி திட்டவட்டம்!
வினோத் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றியான படம் சதுரங்க வேட்டை.
இதன் தொடர்ச்சியாக அரவிந்த் சாமி நடிக்க நிர்மல் குமார் இயக்க உருவாகி வருகிறது ‘சதுரங்க வேட்டை 2’.
த்ரிஷா ஹீரோயினாகவும் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி, வம்சி கிருஷ்ணா, அமித் பார்கவ், ஸ்ரீமன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டப்பிங் பேச மறுத்திருக்கிறார் அரவிந்த் சாமி. காரணம், அவருக்கு பேசப்பட்ட சம்பளம் முழுமையாக வந்து சேரவில்லையாம். முழு சம்பளத்தையும் செட்டில் செய்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று சொல்லிவிட்டாராம்.
அரவிந்த் சாமியின் சம்பளத்தைப் பாக்கி வைத்தது ஏன் என படத்தின் தயாரிப்பாளரான மனோபாலா தான் சொல்ல வேண்டும்....