நடுக்கடலில் போஸ்டர் வெளியீடு… கவனம் ஈர்க்கும் ‘துரோகம் பழகு’ படக்குழு!
🌊 நடுக்கடலில் போஸ்டர் வெளியீடு… கவனம் ஈர்க்கும் ‘துரோகம் பழகு’ படக்குழு!
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துரோகம் பழகு’. சீயோன் ராஜா இயக்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் வித்தியாசமான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், படக்குழுவினர் புதுச்சேரியில் இருந்து நடுக்கடலுக்குச் சென்று, அங்கேயே ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். வழக்கமாக திரையரங்குகள், விழா அரங்குகள் என நடைபெறும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வுகளுக்கு மாறாக, கடலுக்கு நடுவே படத்தின் போஸ்டரை வெளியிட்ட இந்த முயற்சி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.
படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ற வகையில், புரமோஷனிலும் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தக்க்ஷன் விஜய் நாயக...
