ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசை -ஸ்ரத்தா ஸ்ரீநாத்
விக்ரம் வேதா, இவன் தந்திரன் படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியதாவது:-
“என் தந்தை ராணுவ அதிகாரி, அம்மா ஆசிரியை. நான் சட்டம் படித்து இருக்கிறேன். கல்லூரியில் படித்தபோதே சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. அது கவர்ச்சியான உலகம் என்று பெற்றோர் பயந்தனர். பின்னர் அவர்களை சம்மதிக்க வைத்து நடிக்க ஆரம்பித்தேன்.
நான் மணிரத்னம் படங்களை பார்த்து வளர்ந்தவள். அவரது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க அழைப்பு வந்தது. உடனே ஒப்புக்கொண்டு நடித்தேன். அவர் படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
விக்ரம் வேதா படத்தில் சிறப்பான கதாபாத்திரம் அமைந்தது. நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண...