Saturday, October 12
Shadow

Tag: #sibi #anishaambrose #chanthini #cssam #manjulapeetha

ஜோக்கர்  குரு சோமசுந்தரம் நடிப்பில்  காதல் திரில்லராக உருவாகும் ‘வஞ்சகர் உலகம்

ஜோக்கர் குரு சோமசுந்தரம் நடிப்பில் காதல் திரில்லராக உருவாகும் ‘வஞ்சகர் உலகம்

Latest News, Top Highlights
சமீபகாலமாக பல படங்கள் 'திரில்லர்' வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் 'வஞ்சகர் உலகம்'. இவர் இயக்குனர் S P ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல புது முக நடிகர்களோடு சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர். 'வஞ்சகர் உலகம்' குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில் , '' இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். 'வஞ்சகர் உலகம்' படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர...