ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’!
ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’!
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஏற்கனவே ஈர்த்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘சிக்மா’ படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை வெளியான டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் படத்தின் மீதான ஆர்வத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், ‘அய்யய்யோ அம்மாடி’ பாடல் மெலோடியான இசையால் கவனம் பெற்றுள்ளது.
இரண்டு பாடல்களும் முற்றிலும் மாறுபட்ட இசை அனுபவத்தை கொடுத்திருப்பதுடன், படத்தின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்...
