மூன்று தலைமுறை மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒளியேற்றிய ஆசிரியைக்கு உயரிய அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது
மூன்று தலைமுறை மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒளியேற்றிய ஆசிரியைக்கு உயரிய அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது
இராணிப்பேட்டை:
ஒரு ஆசிரியரின் சாதனை என்பது அவர் பெற்ற விருதுகளில் மட்டுமல்ல, அவரது வகுப்பறையிலிருந்து வாழ்க்கையில் முன்னேறிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் அடங்கியுள்ளது. அந்த வகையில், 33 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விப் பணியை தனது வாழ்வின் முக்கியப் பணியாகக் கொண்டு செயல்பட்டு வரும் இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் திருமதி பெ. தேன்மொழி அவர்களுக்கு, தமிழக அரசின் உயரிய ஆசிரியர் விருதுகளில் ஒன்றான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம், கடம்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் திருமதி பெ. தேன்மொழி அவர்கள், கடந்த 12.12.1990 முதல் ...
