
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு வந்த புது சிக்கல்
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ்.எம் இயக்குகிறார். நயன்தாரா, தம்பி ராமய்யா, சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
ஆனால் அசால்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்களும் வைரலாகின. இதை தயாரிப்பு நிறுவனம் மறுக்கவில்லை. இந்நிலையில், இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதுகுறித்து அதன் இயக்குனர் பூபதி ராஜா
நான் நடன இயக்குனராக இருந்து இயக்குனராகி இருக்கிறேன். அசால்ட் என்ற தலைப்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு குறும்படம் இயக்கினேன். அந்தப் படத்தை சிவகார்த்திகேயனுக்கு காட்டி உள்ளேன். தற்போது அந்த குறும்படத்தை திரைப்படமாக எடுத்து வருகிறேன். இதில் ஜெய்வந்த், பருத்தி வீரன் சரவணன், செண்ட்ராயன், சோனா நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து ...