
தென் இந்திய சினிமாவின் பிரச்சனைகளை பிரதமர் கவனத்துக்கு கொண்டுபோகும் தென் இந்திய சினிமா வர்த்தக குழு
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளையும் முன்னிலைப்படுத்தி பாரத் நிதி என்ற அமைப்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன் இணைந்து நடத்தும் 'இந்திய பொழுதுபோக்கு துறை: உலகளாவிய தலைமையாக உருவாக்கம்' என்ற தலைப்பில் ஒரு கான்ஃபெரன்ஸை வரும் ஜனவரி 6ஆம் தேதி சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடத்த இருக்கிறது. அது குறித்து விழா அமைப்பாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கி பேசினர்.
இந்த மாதிரி ஒரு கான்ஃபெரன்ஸ் முதன்முறையாக தென்னிந்திய சினிமாவில் நடத்தப்பட இருக்கிறது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மொழி சினிமா துறைக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பைரஸி மிக முக்கியமான பிரச்சினை. அதேபோல இந்தி சினிமாவுக்கு இருப்பதை போல ஓவர்சீஸ் மார்க்கெட் தென்னிந்திய படங்களுக்கு இல்லை. தமிழ் படங்கள் 25 நாட...