ரஜினிகாந்த் படத்தை பற்றி அதிர்ச்சி தகவல் வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் இந்த படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணா நடித்து என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள என்.டி.ஆர், சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்துள்ள விதேய ராமா ஆகிய 2 தெலுங்கு படங்களும் பேட்ட படத்துடன் திரைக்கு வந்துள்ளன.
அந்த 2 படங்களுக்கும் ஆந்திரா, தெலுங்கானாவில் 90 சதவீதம் தியேட்டர்களை ஒதுக்கி விட்டனர். பேட்ட படத்துக்கு குறைவான தியேட்டர்களே கிடைத்தன. இதனால் அங்குள்ள ரஜினி ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். படம் பார்க்க அவர்கள் நெடும் தொலைவு செல்ல வேண்டி உள்ளது.
“ஆந்திராவில் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியாவதை தெலுங்கு பட உலக மாபியாக்கள் சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த், சுனில் நரங்க், தில் ராஜூ ஆகியோர் தடுத்துள்ளனர். அவர்கள...
