ரஜினியின் உயர்வுக்கு நிதானம் தான் காரணம்: இயக்குநர் மகேந்திரன்
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். விரைவில் புதிய கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக ரஜினி அவர்களது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
இன்று (26-ந்தேதி) முதல்31-ந் தேதி வரை ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரனும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் மகேந்திரன் பேசுகையில்,
யாரும் வருத்தப்படும்படி ரஜினி நடந்து கொள்ள மாட்டார். ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான். நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர். நல்ல தலைவனுக்குரிய அத்தனை அம்சங்களும் ரஜி...