கூட்டத்தை கலைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சூர்யா
சூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகியிருக்கிறது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர்.
சூர்யா - செல்வராகவன் முதல்முறையாக இணையும் இந்த படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...