கபாலி : ஒரு நியாம் என்மகன் படத்துக்கு ஒரு நியாமா தணிக்கை குழுவிடம் எஸ்.வி.சேகர் கேள்வி
எஸ்.வி.சேகர் இவரும் ஒரு தணிக்கை அதிகாரி என்று மறந்து இன்னொரு தணிக்கை அதிகாரியிடம் சண்டை போட்டுள்ளார். ஊருக்குதான் உபதேசம் என்று சொல்லுவார்கள் அதையும் நிருபித்துள்ளார். இதே போல் எத்தனை தயாரிப்பாளர்கள் இவரிடம் குய்யோ முய்யோ என்று கதறி இருப்பார்கள் அன்று இவர் நான் நியாத்தை தான் செய்தேன் என்றார் இதனால் எத்தனை படங்கள் வெளிவராமல் இருக்கிறது. தனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாம் இது என்ன கொடுமை சார்
எஸ்.வி.சேகர் நடிப்பில் விசு இயக்கிய படம் ‘மணல் கயிறு’. இப்படம் தற்போது எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் சேகர் நடிக்க ‘மணல் கயிறு’ இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், சமீபத்தில் இப்படத்தை எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் என்ற முறையில் எஸ்.வி.சேகர் தணிக்கை குழுவிற்கு திரையிட்டு காண்பித்தார்.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யுஏ’ ச...
